How to Add Mega Menu in Wordpress based Website - Step by Step Tutorial in Tamil

 வேர்ட்ப்ரெஸ்ஸில் மெகா மெனுவை (MEGA MENU) சேர்ப்பது எப்படி? படிப்படியான செயல்முறை

சமீபத்தில் நண்பர் ஒருவர் தனது வேர்ட்ப்ரெஸ் வெப்சைட்டில் மேலே உள்ள மெனு பாரினை சற்று அழகாகவும் மேலும் தனது அனைத்து வெப்சைட் கேட்டகரிகளை காலம் (Column) வடிவில் நேவிகேஷன் மெனுவை அணுகுவதற்கு எளிதாகவும் வடிவமைக்க முடியுமா என்று கேட்டிருந்தார்.

இந்த கட்டுரையில் வேர்ட்ப்ரெஸ்ஸின் மேக்ஸ் மெகா மெனு ப்ளக்கின் (Max Mega Menu )மூலம் வடிவமைப்பது எப்படி என்று விரிவாக பார்ப்போம்.

வேர்ட்ப்ரெஸ் வெப்சைட்டில் மெகா மெனு வடிவில் ஏன் சேர்க்க வேண்டும்?

வெப்சைட்டில் உள்ள எல்லா பேஜ் வகை தகவல்களை, நேவிகேஷன் மெனு பாரில் அனைத்து விதமான பார்வையாளருக்கும் எளிதில் அறியும்படி மற்றும் பார்ப்பதற்கு அழகாய் வடிவமைக்கும் போது அவர்கள் எளிதில் தாங்கள் தேடி வந்த விஷயத்தை எளிதில் அணுக முடியும் மேலும் இது உங்கள் வெப்சைட்டிற்கான நோக்கத்தை அவர்கள் அடைய வழிவகுக்கும்.

Reuters, Buzzfeed, மற்றும் Starbucks போன்ற பிரபல வெப்சைட்கள் இந்த மெகா மெனு முறையை அவர்களது நேவிகேஷன் மெனு பாரில் செயல்படுத்தி தங்களது பார்வையாளர்களை மேலும் எளிதில் அணுகவைத்து அவர்களது நோக்கத்தை அடைகிறார்கள்.


வேர்ட்ப்ரெஸ் வெப்சைட்டில் இயல்பாக நேவிகேஷன் மெனு மற்றும் சப் மெனு போன்றவற்றை ட்ராப் டௌன் வடிவில் சேர்ப்பதோடு மட்டுமல்லாது உங்களால் ஒவ்வொரு மெனு ஐட்டம் அருகே இமேஜ், வீடியோ அல்லது ஐகான் வகை மீடியா பைல்கள் போன்றவற்றை சேர்த்து எளிதாக வடிவமைக்கலாம். இதற்கு மெகா மெனு ப்ளக்கின் தேவைப்படுகிறது

சரி, வேர்ட்ப்ரெஸ் வெப்சைட்டில் மெகா மெனு சேர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.

வேர்ட்ப்ரெஸ்ஸில் மெகா மெனு ப்ளக்கின் இன்ஸ்டால் செய்யும் முறை

முதலில், மேக்ஸ் மெகா மெனு (Max Mega Menu) என்ற ப்ளக்கினை இன்ஸ்டால் செய்து ஆக்டிவேட் செய்ய வேண்டும். இது மெகா மெனு வடிவமைக்கும் ப்ளக்கின்களிலேயே சிறந்த மற்றும் மார்க்கெட்டில் கிடைக்கும் இலவச ப்ளக்கின் ஆகும்.

ஆக்டிவேட் செய்தவுடன், இந்த ப்ளக்கின் புதியதாக மெனு ஐட்டம் ஒன்றினை உங்கள் அட்மின் மெனுவில் சேர்க்கும் அதை க்ளிக் செய்வதன் மூலம் நேராக அந்த ப்ளக்கினின் செட்டிங்ஸ் பேஜ்ஜிருக்கு சென்றடையும்.


டீபால்ட் செட்டிங்க்ளிலேயே பெருமபாலான வெப்சைட்களில் இது தோன்றிவிடும். இருந்தாலும் நீங்கள் மெனு கலர்களை வேர்ட்ப்ரெஸ் வெப்சைட்டின் தீம்க்கு ஏற்றவாறு மாற்றியமைக்க வேண்டும்.

உங்களது வேர்ட்ப்ரெஸ் வெப்சைட் தீமின் கலரை கண்டறிய. தனி பிரவுசரில் ஓபன் செய்து ரைட் க்ளிக் செய்ய (Inspect Tool ) என்ற option-னை க்ளிக் செய்ய வேண்டும்.


கலர் HEX கோடினை அறிந்ததும் text பைலில் பின்தேவைக்காக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து மெகா மெனு செட்டிங்ஸ் பேஜில், Menu Themes என்கிற டேபில் சென்று menu bar செக்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.


இங்கே உங்களது வெப்சைட்டின் தீமிர்க்கு ஏற்ற அந்த கலரை Menu Background-ல் Replace  செய்யவேண்டும்

இதனை அப்படியே சேமித்துகொள்ள  கீழே உள்ள "Save Changes" என்ற பட்டனை க்ளிக் செய்ய மறக்காதீர்கள் 

மெகா மெனு செட்டிங்கை நாம் இப்போது நிறுவிவிட்டோம், இப்போது மெகா மெனுவை கிரியேட் செய்வோம்.

முதலில் Appearance » Menus என்ற பேஜ்ஜிற்கு செல்லவும், டாப் லெவல் மெனு ஐட்டம்ங்களை உருவாக்கவும்.

அடுத்து மெனு ஸ்க்ரீனில் மெகா மெனுவை ‘Max Mega Menu Settings’. பக்கத்தில்  எனேபிள் பாக்ஸை டிக் செய்யவும்.


ஒவ்வொரு மெனு ஐட்டம் டேபிலும் உங்களது மவுஸால் ஹோவர் செய்யும்போது மெகா மெனு பட்டன் தோன்றும்.

அந்த பட்டனை க்ளிக் செய்யும்போது பாப்-அப் தோன்றும் இங்கேதான் இமேஜ், வீடியோ அல்லது ஐகான் வகை மீடியா பைல்கள் சேர்ப்பது மற்றும் காலம் முறையில் தோன்றவைத்து உருவாக்கமுடியும்.


ஒவ்வொரு விட்ஜெட்டின் wrench ஐகானை கிளிக் செய்யும் போது அந்த விட்ஜெட்களை எடிட் செய்யலாம். அப்படி எடிட் செய்த பிறகு விட்ஜெட்டினை சேமிப்பதற்கான Save பட்டனை க்ளிக் செய்ய மறக்காதீர்கள்.

Save செய்ததும், பாப்-அப்பினை கிளோஸ் செய்துவிடுங்கள். பிறகு உங்கள் வெப்சைட்டினை இன்னொரு டேபில் ஓபன் செய்து மெகா மெனு வடிவில் மெனு பார் தெரிகிறதா என்று உறுதி செய்யவும்.



Previous Post Next Post